காஷ்மீர்: பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு

இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதனை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கொண்டாடிய வேளையில் காஷ்மீர் மக்கள் சிலரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியது கடும் சர்ச்சைக்குள்ளானது.

குறிப்பாக ஷெர் ஐ காஷ்மீர் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர்.இதை விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவு செய்ததால் அம்மாநில காவல்துறைத் தலைவர் விஜய் குமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

மேலும் காஷ்மீரின் மற்றொரு பகுதியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனக் கோஷம் எழுப்பிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com