இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும்: குழந்தைகளுக்கு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு

இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல புதிய பாதுகாப்பு வரைவு விதி முறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும்: குழந்தைகளுக்கு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு
இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும்: குழந்தைகளுக்கு பாதுகாப்பு வரைவு விதிகள் வெளியீடு

இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல புதிய பாதுகாப்பு வரைவு விதி முறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

 இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களும், அவருக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் குறித்த விதிகள் இதுவரை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தற்போது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிமுறையை உருவாக்கி மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. 2019, ஆகஸ்ட் 9-ஆம் தேதியிட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019-இல் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129-இல் உள்ள 2-ஆவது விதியில் மேலும் திருத்தம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்த விதியின்படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளுக்கு வரைவு விதிகளை உருவாக்கி கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
 இந்த அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

 இரு சக்கர வாகனத்தில் 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, வாகன ஓட்டுபவரின் உடலோடு இணைத்துக் கட்டப்படும் கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலைக்கவசம் அணிந்திருப்பதையும் ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தலைக்கவசம் இந்திய தர நிர்ணய அமைவனத்தால் (பிஐஎஸ்) பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், வாகனத்தின் வேகம் மணிக்கு 40 கி.மீ.க்கு மேல் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 இதுதொடர்பான கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபங்கள் குறித்து வாகன உபயோகிப்பாளர்கள் 30 நாள்களுக்குள் தெரிவிக்கவும் மத்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. இதை மின்னஞ்சல் மூலமாகவோ (comments-morth@gov.in) அல்லது நேரடியாகவோ அல்லது கடிதத் தொடர்பு மூலமோ தெரிவிக்கலாம்.
 மேலும், இதுதொடர்பாக தில்லி டிரான்ஸ்போர்ட் பவனிலில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைச் செயலருக்கு தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com