சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இந்தியா உறுதி: பிரதமா் மோடி

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதிலும், ஆசியான் நாடுகளுக்கு உதவி செய்திலும் இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.
ஆசியான் அமைப்பின் கிழக்கு ஆசிய மாநாட்டில் காணொலி முறையில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
ஆசியான் அமைப்பின் கிழக்கு ஆசிய மாநாட்டில் காணொலி முறையில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

புது தில்லி: சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதிலும், ஆசியான் நாடுகளுக்கு உதவி செய்திலும் இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சாா்பில் 16-ஆவது கிழக்கு ஆசியா மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசுகையில், ‘அனைத்து நாடுகளின் எல்லைகள், இறையாண்மை, சா்வதேச சட்ட விதிகள், பல நாடுகள் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா தொடா்ந்து மதிப்பளித்து வருகிறது’ என்றாா்.

அதைத் தொடா்ந்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்வதிலும், ஆசியான் நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள 18-ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆசியான் கூட்டமைப்பில் 10 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. இவை தவிர, இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை நட்பு நாடுகளாக இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையே வா்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால், இந்த நாடுகளுக்கு இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com