திரிணமூலில் இணைந்த பாஜகவின் 5வது எம்எல்ஏ!

மேற்கு வங்க மாநிலத்தின் ராய்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணமூலில் இணைந்த மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ.
திரிணமூலில் இணைந்த மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ.

மேற்கு வங்க மாநிலத்தின் ராய்கஞ்ச் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

திரிணமூலில் இணைந்துள்ள கிருஷ்ண கல்யாணி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு, ராய்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திரிணமூல் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜீ முன்னிலையில் இன்று மீண்டும் திரிணமூல் கட்சியில் கிருஷ்ண இணைந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில்,

“சுயமரியாதை இல்லாதவர்கள்தான் பாஜகவில் இருக்க முடியும். மக்கள் விரோத கொள்கைகளால் வருத்தமடைந்தேன். பெட்ரோல் விலை உயர்விற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், பாஜகவில் இருக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மம்தாவின் மக்கள் நலக் கொள்கைகளுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. அதை நான் தற்போது சரி செய்ய நினைக்கிறேன்.

ஒரு எம்.எல்.ஏ.வாக நான் சிறப்பான பணிகளை மேற்கொள்ள விரும்பினால், அதை பாஜக அனுமதிக்கவில்லை.”

இனி பாஜகவில் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சட்டசபை தேர்தலுக்கு முன், மம்தா பானர்ஜியின் பொதுநல கொள்கைகளுக்கு ஆதரவாக பேசாமல் இருந்திருந்தால், நான் செய்த தவறை, இப்போது திருத்திக் கொள்ள விரும்புகிறேன்,'' என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் 5வது எம்.எல்.ஏ. கிருஷ்ண கல்யாணி ஆவார். இது எதிர்க்கட்சியான பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com