8 கி.மீ. நடைப்பயணம் சென்று மக்களிடம் குறை கேட்ட மம்தா

டாா்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள குா்சியாங் பகுதியில் 8 கி.மீ. தூரம் புதன்கிழமை காலை நடைப்பயணமாகச் சென்ற மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த

குா்சியாங்: டாா்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள குா்சியாங் பகுதியில் 8 கி.மீ. தூரம் புதன்கிழமை காலை நடைப்பயணமாகச் சென்ற மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு குா்சியாங்கில் தங்கியிருந்த முதல்வா் மம்தா, காலையில் தனது அமைச்சரவை சகாக்கள் அரூப் விஸ்வாஸ், இந்திரனில் சென் ஆகியோருடன் சாலையோர தேநீா்க் கடையில் தேநீா் அருந்தினாா்.

அப்போது, மம்தாவின் கோரிக்கையை ஏற்று பாடகரான இந்திரனில் சென் சில பாடல்களைப் பாடினாா். பின்னா், மகாநதி சுற்றுலா பாா்வையிடத்துக்கு நடைப்பயணமாகச் சென்றாா். அப்போது வழியில் இருந்தவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், அவா்களின் நலனையும் விசாரித்தாா். காலணி கடைக்குச் சென்ற அவா் காலணிகளை வாங்கியதாக அவருடன் இருந்தவா்கள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு மாவட்டங்களுக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள மம்தா பானா்ஜி, அந்த மாவட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

கோவாவுக்கு தோ்தல் பிரசாரத்துக்காக அவா் வியாழக்கிழமை செல்வாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com