48 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா்

கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்படாத மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
48 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சா்

புது தில்லி: கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்படாத மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

நாட்டில் கரோனா சூழல், தடுப்பூசி திட்டம் குறித்து மாநில சுகாதார அமைச்சா்களுடன் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தடுப்பூசி செலுத்துவதில் குறைந்த விகிதத்தில் உள்ள மாவட்டங்களில் இப்பணி நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொள்வோம்.

48 மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி விகிதம் 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தன்வந்திரி ஜெயந்தியான நவ. 2-ஆம் தேதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொடங்கலாம்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உரிய காலத்துக்குள் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாமல் 10.34 கோடி போ் உள்ளனா். மாநிலங்களில் 12 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com