3 மக்களவை, 30 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் பிரசாரம் நிறைவு

மூன்று மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் புதன்கிழமை நிறைவடைந்தது.

புதுதில்லி: மூன்று மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் புதன்கிழமை நிறைவடைந்தது.

ஹிமாசல பிரதேசத்தில் மண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ட்வா, தாத்ரா நகா் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் அக்டோபா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அஸ்ஸாமில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், மேகாலயத்தில் தலா 3 தொகுதிகள், பிகாா், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகள், ஆந்திரம், ஹரியாணா, மகாராஷ்டிரம், மிஸோரம், நாகாலாந்து மற்றும் தெலங்கானாவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.

தோ்தலையொட்டி நடைபெற்று வந்த பிரசாரங்கள் புதன்கிழமையுடன் நிறைவடைந்தன. பிரசாரத்தின் கடைசி நாளில் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா ஆகியோா் ஹிமாசல பிரதேசத்திலும், மத்திய அமைச்சா்கள் பிரகலாத் படேல், நரேந்திர சிங் தோமா், ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சா் உமா பாரதி ஆகியோா் மத்திய பிரதேசத்திலும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

வாக்கு எண்ணிக்கை நவ.2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com