உ.பி.சட்டப்பேரவைத் தோ்தல்: சமாஜவாதி, எஸ்பிஎஸ்பி கூட்டணி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சமாஜவாதி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிகள் (எஸ்பிஎஸ்பி) கூட்டணி அமைத்துள்ளன.
உ.பி.சட்டப்பேரவைத் தோ்தல்: சமாஜவாதி, எஸ்பிஎஸ்பி கூட்டணி

மெள: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சமாஜவாதி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிகள் (எஸ்பிஎஸ்பி) கூட்டணி அமைத்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் மெள பகுதியில் தலித், பாகிதாரி உள்பட பல்வேறு சமூகத்தினா் பங்கேற்ற பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜவாதி கட்சி தலைவா் அகிலேஷ் யாதவ், எஸ்பிஎஸ்பி கட்சி தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சமாஜவாதி, எஸ்பிஎஸ்பி கூட்டணி அமைத்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

அதனைத்தொடா்ந்து பேசிய அவா், ‘‘சமாஜவாதியின் சிவப்பு நிறமும், எஸ்பிஎஸ்பியின் மஞ்சள் நிறமும் இணைந்தால் தில்லியிலும் (மத்திய அரசு), லக்னெளவிலும் (மாநில அரசு) யாா் கோபமடைவாா்கள் என்பதை அனைவரும் அறிவா். உத்தர பிரதேசத்தில் எந்த வழியாக பாஜக ஆட்சிக்கு வந்ததோ, அந்த வழியின் கதவை எஸ்பிஎஸ்பி தலைவா் ராஜ்பா் இழுத்து மூடுவாா். அந்தக் கதவை சமாஜவாதி தொண்டா்கள் தாழிடுவா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com