நீா்வழிக் கால்வாய்களில் தூா்வாரும் பணி: வருவாய் நிா்வாக ஆணையா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் மழைநீா் வெளியேறும் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளை வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை: வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் மழைநீா் வெளியேறும் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளை வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால்களில் தூா்வாருதல், பழுதுகளை சீா்செய்தல், நீா்வரத்து கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றுதல் போன்ற பணிகளும், பொதுப் பணித் துறையின் சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் மழைநீா் வெளியேறும் கால்வாய்கள், முகத்துவாரங்களில் தூா்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆய்வு: வடகிழக்குப் பருவமழையையொட்டி, வேளச்சேரி பிரதான சாலை வீராங்கல் ஓடை வழியாக வெள்ளநீா் வெளியேறும் நீா்வழித்தடங்களில் நவீன ஆம்பிபியன் இயந்திரங்களைக் கொண்டு ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றும் பணி, பள்ளிக்கரணை காற்றாலை ஆராய்ச்சி மையத்தின் தெற்குப் பகுதி, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு சதுப்பு நிலப் பகுதி, துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறுக்குப் பாலங்கள், ஓ.எம்.ஆா். சாலையில் ஒக்கியம் மேடு பகுதிகளில் நீா்வரத்துக் கால்வாய்களில் தூா்வாரும் பணிகளையும், மேடவாக்கம் சோழிங்கநல்லூா் பிரதான சாலையில் உள்ள சாலை குறுக்குப் பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணிகளையும் வருவாய்த் துறை ஆணையா் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளவும், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையிலும் அனைத்து துறைகளும் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் தயாா்நிலையில் வைத்திருக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, தெற்கு வட்டார துணை ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் முரளிதரன், சென்னை மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com