ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை டிசம்பர் மாதம், 2024ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடங்கிய மத்திய அமைச்சரவை நியமனக்குழு இந்த முடிவை நேற்று மாலை எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மூன்றாண்டுகளுக்கு அதாவது டிசம்பர் 10, 2021ஆம் ஆண்டு வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் அமைச்சரவை நியமனக்குழு நீட்டித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், 2018ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கி ஆளுநராக தாஸ் நியமிக்கப்பட்டார். முன்னதாக, நிதித்துறை அமைச்சகத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒருவருக்கு பதவிக்காலம் நீட்டிப்பு செய்வது இதுவே முதல்முறை. முன்னர், பதவி வகித்தவர்கள் ஒன்று ராஜிநாமா செய்திருக்கின்றனர் அல்லது தங்களின் கல்வியாளர் பணிக்கு திரும்ப சென்றிருக்கின்றனர்.

நிதித்துறை, வரி வசூல், தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை சக்திகாந்த தாஸ் வகித்துள்ளார். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட வங்கிகளில் இந்தியாவின் மாற்று ஆளுநராக சக்திகாந்த தாஸ் பணியாற்றியிருக்கிறார்.

நிதித்துறை அமைச்சகத்தில் சக்திகாந்த தாஸின் பணிகாலத்தின்போது, 8 முறை மத்திய நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் பணியில் அவர் நேரடியாக ஈடுபட்டார். 

தில்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை அவர் முடித்தார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உள்பட பல விவகாரத்தில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மாற்றுக் கருத்து நிலவிவந்தது. அப்போது, 2018ஆம் ஆண்டு, ஆளுநராக பதவிவகித்த உர்ஜித் படேல் திடீரென ராஜிநாமா செய்தார். இதையடுத்துதான், ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த் தாஸ் நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com