சீனா, பாகிஸ்தான், தலிபான் கூட்டணிக்கு சாத்தியம்: சிதம்பரம் கவலை

சீனா, பாகிஸ்தான், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டணி அமைக்க சாத்தியமுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனா, பாகிஸ்தான், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டணி அமைக்க சாத்தியமுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிஸ்தான் தொடர்பான தீர்மானம் இயற்றப்பட்டதற்கு நமக்கு நாமே வாழ்த்து தெரிவித்து கொள்வது முதர்ச்சியற்ற தன்மையை வெளிகாட்டுகிறது என்றும் சீனா, பாகிஸ்தான், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டணி அமைக்க சாத்தியமுள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடாது, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டவர் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை பின்பற்ற வேண்டும் ஆகிய  தீர்மானங்கள் இந்தியா தலைமை வகிக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சிதம்பரம் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில், "ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிதான் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அரசு தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்கிறது. இத்தீர்மானத்திற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உள்ளன. இந்தியாவிற்கு திருப்தி அளிக்கும் விதமாக இப்பிரச்னை முடிக்கப்பட்டது முதல் அர்த்தம். ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அப்படி நடக்கவில்லை. நம்முடைய விருப்பங்களை தீர்மானமாக முன்மொழிந்து அதற்கு மற்றவர்களை கையெழுத்திட வைத்தோம் என்பது இரண்டாவது அர்த்தம். இதுதான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்றது" என்றார்.

சீனா, பாகிஸ்தான், தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆகியவை கூட்டணி அமைக்க சாத்தியமுள்ளது நமக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றும் சிதம்பரம் எச்சரித்துள்ளார். அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் 13 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com