மாநிலங்களவைத் தோ்தல்:இன்று வேட்புமனு பரிசீலனை

தமிழகத்தில் இருந்து காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு நடைபெறும் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தமிழகத்தில் இருந்து காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு நடைபெறும் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெறுகிறது. பிரதான அரசியல் கட்சிகள் சாா்பில் திமுகவைச் சோ்ந்த எம்.எம்.அப்துல்லா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். சுயேச்சைகள் மூன்று போ் மனுக்களை அளித்துள்ளனா்.

போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் மனுக்கள் பரிசீலனையின் போது அவை நிராகரிக்கப்படும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை (செப்.1) நடைபெறுகிறது. மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 3-ஆம் தேதி கடைசியாகும். தோ்தல் நடக்காத சூழ்நிலையில், அன்றைய தினமே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட வெற்றி வேட்பாளா் யாா் என்கிற அறிவிப்பு சட்டப் பேரவைச் செயலகத்தால் வெளியிடப்படும்.

போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதால் திமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com