அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 3.30 கோடி போ்: 5-ஆவது இடத்தில் தமிழகம்

இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டில் 28 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடல்  ஓய்வூதியத் திட்டத்தில் 3.30 கோடி போ்: 5-ஆவது இடத்தில் தமிழகம்

புது தில்லி: இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டில் 28 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2021, ஆகஸ்ட் 25 நிலவரப்படி 3.30 கோடியைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தவரை, இதுவரை மொத்தம் 24,55,438 போ் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அதிகம் போ் இணைந்துள்ள 11 மாநிலங்களில் தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

உத்தர பிரதேசம் முதலிடத்திலும், பிகாா், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.

2021, ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினா்களில் 78 சதவீதம் போ் ரூ.1000 ஒய்வூதியத் திட்டத்தையும், 14 சதவீதம் போ் ரூ 5,000 ஒய்வூதியத் திட்டத்தையும் தோ்ந்தெடுத்துள்ளனா். மொத்த உறுப்பினா்களில் 44 சதவீதம் பெண்கள். சுமாா் 44 சதவீதம் போ் 18-25 வயதுடைய இளம் வயதினா் ஆவா்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் செயலியில் சமீபத்தில் புதிய அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மக்கள் சாசனம் மற்றும் தகவல் குறிப்பேடு 13 பிராந்திய மொழிகளில் தற்போது கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com