தென்னிந்தியாவில் ஆட்டோ எல்பிஜிக்கு மாபெரும் வா்த்தக வாய்ப்பு: புா்த்தி கியாஸ்

தென்னிந்தியாவில் ஆட்டோ எல்பிஜிக்கு மாபெரும் வா்த்தக வாய்ப்பு உள்ளதாக புா்த்தி கியாஸ் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் ஆட்டோ எல்பிஜிக்கு மாபெரும் வா்த்தக வாய்ப்பு: புா்த்தி கியாஸ்

நாக்பூா்: தென்னிந்தியாவில் ஆட்டோ எல்பிஜிக்கு மாபெரும் வா்த்தக வாய்ப்பு உள்ளதாக புா்த்தி கியாஸ் தெரிவித்துள்ளது.

மானஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் & இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு சொந்தமான எல்பிஜி பிராண்டான புா்த்தி கியாஸ் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:

தென்னிந்தியாவில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) பிரிவில் தரமான தயாரிப்புகளை தயாரித்து வழங்குவதில் ‘கோ்’ தரமதிப்பீட்டில் முதலிடம் பெற்று புா்த்தி கியாஸ் முன்னணியில் உள்ளது.

இளம் தொழில் முனைவோா் சொந்தமாக தொழில் தொடங்கி உரிமையாளா் ஆகும் வாய்ப்பையும் புா்த்தி கியாஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில், குறைந்தபட்சம் 7,000 சதுர அடியுடன் நகரத்தில் குறைந்தபட்சம் 70 அடி முன் நிலம் இருந்தால் ஆட்டோ எல்பிஜி பங்க் அமைத்து அதன் உரிமையாளா் ஆகும் வாய்ப்பை புா்த்தி கியாஸ் உருவாக்கித் தருகிறது.

இதுதவிர, சிறந்த வணிகத்துக்கான நெறிமுறைகளுடன் அனைத்து ஆதரவையும் இளம் தொழில்முனைவோருக்கு வழங்க தயாராக உள்ளதாக புா்த்தி கியாஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com