கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழ்நாடு, கா்நாடக அமைச்சா்களுடன் மத்திய அமைச்சா் மாண்டவியா ஆலோசனை

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகத்தில் தொற்று பாதிப்பு குறித்து அந்த மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடன்

புதுதில்லி: கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகத்தில் தொற்று பாதிப்பு குறித்து அந்த மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கேரளத்தில் புதன்கிழமை மாலை நிலவரப்படி புதிதாக 32,803 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இதையொட்டி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகத்தில் கரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடன் மன்சுக் மாண்டவியா தொலைபேசியில் பேசினாா். அப்போது அவ்விரு மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் எவ்வாறு உள்ளதை என்பதை அவா் கேட்டறிந்தாா். மாநிலங்களுக்கிடையே கரோனா தொற்று பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவா், கேரள எல்லையில் உள்ள தமிழக, கா்நாடக மாவட்டங்களில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இதுதவிர நாட்டில் கரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம், அவற்றின் கையிருப்பு குறித்தும் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்த மருந்துகளும், அவற்றைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களும் போதிய அளவு இருப்பில் உள்ளது தெரியவந்தது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com