லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை, பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை அந்த யூனியன் பிரதேச அரசு புதன்கிழமை வெளியிட்டது.
லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை, பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை அந்த யூனியன் பிரதேச அரசு புதன்கிழமை வெளியிட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான விலங்கு மற்றும் பறவை அறிவிக்கப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசத்தின் வனம், சுற்றுச்சூழல் துறை தலைமைச் செயலா் பவண் கோத்வால் இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டாா்.

முன்பு ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக இருந்தபோது மாநில விலங்காக காஷ்மீா் மான், பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலம் இப்போது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து, தனக்கான விலங்கு மற்றும் பறவையை லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விலங்கும், பறவையும் அரிய வகையைச் சோ்ந்தவையாகும். இதில் காஷ்மீா் மான், காஷ்மீா் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. கருப்புக் கழுத்து கொக்கு கிழக்கு லடாக்கில் அதிகம் உள்ளது. பனிச் சிறுத்தைகள் லடாக் பகுதியில் 200 முதல் 300 வரையிலான எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com