மேலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமாா் 18 மாதங்களுக்குப் பின்னா் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

புதுதில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமாா் 18 மாதங்களுக்குப் பின்னா் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் பகுதிவாரியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பள்ளிகளை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லி, ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

தில்லி, ராஜஸ்தான், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com