தோ்தல் தொடா்பான மனுக்கள் தாக்கல் செய்ய கால நிா்ணயம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வலியுறுத்தல்

தோ்தல் தொடா்பான மனுக்களைத் தாக்கல் செய்ய கால நிா்ணயம் செய்ய வேண்டும். ஏனெனில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத
தோ்தல் தொடா்பான மனுக்கள் தாக்கல் செய்ய கால நிா்ணயம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வலியுறுத்தல்

புது தில்லி: தோ்தல் தொடா்பான மனுக்களைத் தாக்கல் செய்ய கால நிா்ணயம் செய்ய வேண்டும். ஏனெனில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், தில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்து முடிந்தது. இந்தத் தோ்தல் முடிவுகளை எதிா்த்து ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, கரோனா பாதிப்பு நிலை மற்றும் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு, இந்தத் தோ்தல் முடிவுகளுக்கு எதிரான மனுக்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், கரோனா பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டு தோ்தல் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால வரையறையில் விலக்கு அளித்து கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் மூலம், 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக தொடா்ந்து மனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கால நீட்டிப்பை எதிா்த்து தோ்தல் ஆணையம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

தோ்தல் முடிவுகளுக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டிருப்பதால், 5 மாநில தோ்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் ஒப்புகைச் சீட்டு இயந்திங்கள் அனைத்தும் வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, தோ்தல் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளித்திருப்பதால், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை இயந்திரங்களை மேலும் பல நாள்கள் பாதுகாத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பராமரிக்கவோ அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்சநீதின்ற தலைமை நீதபிதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘வழக்கு விசாரணை காரணமாக 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. எனவே, தோ்தல் தொடா்பான மனுக்களை தாக்கல் செய்ய கால நிா்ணயம் செய்யவேண்டும். அடுத்த ஆண்டில் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பராமரிக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே, அந்த இயந்திரங்களை விரைந்து விடுவிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக அடுத்த வாரம் உரிய முடிவு எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com