உத்தரப் பிரதேசம் : அதிகரிக்கும் டெங்கு பலி எண்ணிக்கை

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 55 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது .
உத்தரப் பிரதேசம் : உயரும் டெங்கு பலி எண்ணிக்கை
உத்தரப் பிரதேசம் : உயரும் டெங்கு பலி எண்ணிக்கை

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 55 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது .

மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி  அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால். டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

பின் மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளில்  மர்ம காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போது இன்று (செப்-2) நிலவரப்படி பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 சிறார்கள் உட்பட 41 பேரும் மதுராவில் 15 பேரும் பலியாகி இருக்கிறார்கள். மேலும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபர்களும் அதிகரித்து இருப்பதால் தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை அவர்களுக்கு தீவிர சிகிச்சையை அளித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்-1)  அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குழந்தைகள் இறந்ததால் எழுந்த  விமர்சனங்களைத் தொடர்ந்து  பிரோசாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியை மாற்றியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com