கலக்கத்தை ஏற்படுத்தும் மகாராஷ்டிர மாநில கரோனா புள்ளி விவரம்

அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட சி.1.2 என்ற புதிய வகை கரோனா மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிக்கு தொற்றியிருந்தது கண்டறியப்பட்ட நிலையில்,
3ஆம் அலை அச்சத்துக்கு இடையே.. 8 மகாராஷ்டிர மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா
3ஆம் அலை அச்சத்துக்கு இடையே.. 8 மகாராஷ்டிர மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா


அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட சி.1.2 என்ற புதிய வகை கரோனா மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிக்கு தொற்றியிருந்தது கண்டறியப்பட்ட நிலையில், 8 மகாராஷ்டிர மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்படு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் கரோனா புள்ளி விவரங்கள் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில், கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த மாநிலத்தின் சராசரியான 2.58%ஐ விட அதிகமாக உள்ளது. மகாராஷ்டிர சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், புனே இன்னமும் அபாயகரமான பகுதியாகவே உள்ளது. இங்குதான் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

வாராந்திர கரோனா உறுதியாகும் விகிதம் புனேவில் 6.15% ஆக உள்ளது. இதுவே அகமதுநகரில் 4.85%, சாங்லி 4.02%, சதாராவில் 3.97%, ஒசமானாபாத்தில் 3.56%, சிந்துதுர்கா 3.18%, சோலாபூர் 2.60%, ரத்னகிரி 2.59% ஆக உள்ளது. இந்த 8 மாவட்டங்களிலும், மாநிலத்தின் சராசரி 2.58%க் காட்டிலும் கூடுதலாக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் மட்டும் தற்போது 51,238 கரோனா நோயாளிகள் உள்ளனர். புனேவில் மட்டும் 13,515 பேர் உள்ளனர். இது 26.38% ஆகும். தாணே, சதாரா, அகமதுநகர் மாவட்டங்களிலும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர்.

புணேவில் மட்டும் கடந்த 10 நாள்களில் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 10 நாள்களில், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு 44,366 ஆக இருக்கும் நிலையில், புணேவில் மட்டும் 9,506 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மும்பையிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 300 - 350 பேருக்கு கரோனா பாதித்து வந்த நிலையில், அது செப்டம்பர் 1ஆம் தேதி 416 ஆக உள்ளது. மும்பையில் மட்டும் 5க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்ட 32 கட்டடங்களுக்கு சுகாதாரத்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாம் அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் கரோனா அதிகமாக உறுதி செய்யப்படும் மாநிலங்களின் பட்டியலில் கேரளத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் இருப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com