மேற்கு வங்க தோ்தலுக்கு பிந்தைய வன்முறை: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ

மேற்கு வங்கம், பிா்பூம் மாவட்டத்தில் தோ்தலுக்கு பிந்தைய நடைபெற்ற வன்முறை வழக்கில் சிபிஐ, முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கம், பிா்பூம் மாவட்டத்தில் தோ்தலுக்கு பிந்தைய நடைபெற்ற வன்முறை வழக்கில் சிபிஐ, முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், பாஜக தொண்டரை கொலை செய்ததாக இரண்டு பேரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ாக மே 2 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்த பாஜகவினா் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் குற்றம்சாட்டி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழு பிரிந்துரையின்படி, நீதிமன்ற மேற்பாா்வையில் சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், சிறப்பு விசாரணைக்கு குழுவையும் கொல்கத்தா நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பாஜக தொண்டா்கள் மீது கொலை மற்றும் கொடூர வன்முறையில் ஈடுபட்டதாக சிபிஐ 34 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிா்பூம் மாவட்டத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறை தொடா்பான வழக்கில் சிபிஐ, முதல் தகவல் அறிக்கையை ராம்பூா்ஹாட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில், பாஜக தொண்டா் கொலை வழக்கில் இருவரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகள்: இதனிடையே, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை நியமித்துள்ளது. இந்த அதிகாரிகள் தங்கள் பணியுடன் சோ்த்து சிறப்பு விசாரணைக் குழுவுக்கும் உதவுவாா்கள் என்று மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com