7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை; சத்தீஸ்கரில் விசாரணைக்கு உத்தரவு

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள மெயின்பாட்டில் அமைந்துள்ள நர்மதாப்பூர் சுகாதார மையத்தில் குடும்ப கட்டுப்பாடு முகாம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடத்தப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கர் சுர்குஜா மாவட்டத்தில் அரசு குடும்ப கட்டுப்பாடு முகாமில் ஏழு மணி நேரத்தில் 101 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், விதிமீறல்கள் நடைபெற்றதாகக் கூறி, சத்தீஸ்கர் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அலுவலர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். 

தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள மெயின்பாட்டில் அமைந்துள்ள நர்மதாப்பூர் சுகாதார மையத்தில் குடும்ப கட்டுப்பாடு முகாம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடத்தப்பட்டது. முகாமில் விதிமீறல்கள் நடைபெற்றதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதையடுத்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கும் சுகாதார அலுவலருக்கும் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தலைமைச் செயலாளர் மருத்துவர் அலோக் சுக்லா கூறுகையில், "முகாம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாமில் உள்ள அரசு மருத்துவர், மொத்தமாக 101 அறுவை சிகிச்சை செய்துள்ளார். குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களின் உடல் நிலை சாதரணமாகவே உள்ளது. ஆனால், அரசு வழிகாட்டுதலின்படி, ஒரு நாளைக்கு ஒரு மருத்துவர் 30 அறுவை சிகிச்சைகளைதான் செய்ய வேண்டும். எனவே, விதி மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

குறிப்பிட்ட அந்நாளில், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதற்காக அதிக அளவில் பெண்கள் வந்திருந்ததாக மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தொலைதூரத்தில் இருந்து வந்திருந்ததாகவும் அடிக்கடி பயணம் செய்ய முடியாது என்றும் பெண்கள் தெரிவித்தாக மருத்துவர் கூறினார். அவர்களின் கோரிக்கையின் படியே அறுவை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்" என்றார்.

தலைமை சுகாதார அலுவலர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அரசு குடும்ப கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com