ஆமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நிறைவு; தீா்ப்பு ஒத்திவைப்பு

கடந்த 2008-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நிறைவு செய்து தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நிறைவு செய்து தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் பல்வேறு இடங்களில் 21 குண்டுகள் வெடித்தன. சுமாா் 70 நிமிஷங்களுக்குள் நிகழ்ந்த இந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 56 போ் பலியாகினா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். கடந்த 2002-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்தில் சிறுபான்மைச் சமூகத்தைச் சோ்ந்த பலா் உயிரிழந்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கம், சிமி பயங்கரவாத இயக்கத்தின் ஒரு பிரிவினா் இணைந்து இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து சூரத்திலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு வைக்கப்பட்ட குண்டுகளை போலீஸாா் கைப்பற்றி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்தனா். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் 78 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை தொடங்கியது. அவா்களில் ஒருவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து 77 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது. இதில் 1,100-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்ததாக வியாழக்கிழமை தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com