நாடு முழுவதும் புதிதாக 42,766 பேருக்கு தொற்று: 308 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் புதிதாக 42,766 பேருக்கு தொற்று: 308 பேர் பலி


புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகரித்து அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,88,673-ஆக உயா்ந்துள்ளது. தொடர்ந்து 70 நாள்களாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது. 

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ள நிலையில், அங்கு தினசரி பாதிப்பும் இறப்பும் தொடா்ந்து அதிகமாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,682 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

36,385 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,21,00,001 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,10,048-ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 24 சதவிகிதமாகவும், தேசிய அளவில் குணமடைந்தவா்களின் விகிதம் 97.42 சதவீதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 308 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,40,533 -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 68,46 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 53,00,58,218  பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 17,47,476 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com