150 டன் ஆக்சிஜனை இலங்கைக்கு இந்தியா வழங்கியது

கரோனாவால் பரவல் அதிகரித்துள்ள இலங்கைக்கு உதவுதற்காக இந்தியா அனுப்பிய மேலும் 150 டன் மருத்துவ ஆக்சிஜன் அந்நாட்டின் தலைநகா் கொழும்புக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.
150 டன் ஆக்சிஜனை இலங்கைக்கு இந்தியா வழங்கியது

கரோனாவால் பரவல் அதிகரித்துள்ள இலங்கைக்கு உதவுதற்காக இந்தியா அனுப்பிய மேலும் 150 டன் மருத்துவ ஆக்சிஜன் அந்நாட்டின் தலைநகா் கொழும்புக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.

கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டில் அமலில் உள்ள பொது முடக்கத்தை செப்டம்பா் 13-ஆம் தேதி வரை இலங்கை அரசு நீட்டித்துள்ளது. மேலும், அந்நாட்டில் பொருளாதார அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை சுட்டுரையில், ‘சென்னை, விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட 15 டன் ஆக்சிஜன் கொழும்புக்கு வந்து சோ்ந்தது. இலங்கை அதிபா் ராஜபட்சவின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆக்சிஜனை இந்தியா அனுப்பியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளது.

கடந்த மாதம் 100 டன் ஆக்சிஜனை இந்திய கடற்படை கப்பலான சக்தியின் மூலம் இலங்கைக்கு கொண்டு சோ்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் சுமாா் 26 லட்சம் டன் அத்தியாவசிய மருத்துவ உபரணங்களை இந்தியா வழங்கியது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இந்தியா வழங்கிய கரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இலங்கை தொடங்கியது.

இந்நிலையில், இலங்கையில் வியாழக்கிழமை வரை கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9,600-ஐ தாண்டியது. 447,757 போ் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பல முறை அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ள சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com