ஜி 7 நாடுகளை காட்டிலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளோம்: மத்திய அரசு

ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆகஸ்ட் மாதத்தில், ஜி 7 நாடுகள் கூட்டாக செலுத்திய தடுப்பூசியை காட்டிலும் இந்தியாவில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கமான MyGovIndia-இல் வெளியிடப்பட்ட பதிவில், "ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவில் 18 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய ஜி 7 நாடுகள் சொலுத்திய மொத்த தடுப்பூசிகளை காட்டிலும் அதிகம். 

ஜி 7 நாடுகளை பொறுத்தவரையில், கனடாவில் குறைந்தபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகளும் அதிகபட்சமாக ஜப்பானில் 4 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு சாதனை. உலகளவில் தடுப்பூசி விநியோகத்தில் முன்னிலை இந்தியா வகித்துள்ளது" என பதிவிட்டுள்ளது.

இதுவரை, இந்தியாவில் 68.46 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com