உலகளவில் மக்களின் ஆதர்ஷ நாயகனாக தொடரும் மோடி: கருத்துக்கணிப்பு சொல்லும் செய்தி என்ன?

கரோனாவுக்கு பிறகு 2020ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 84 சதவிகித்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தி மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 70 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய தலைவர்களை காட்டிலும் மோடிக்கு அதிகளவில் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்பட்டியலில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கனடா பிரதமர் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜூனில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 66 சதவிகிதத்தினர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

உலக தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு:

இந்திய பிரதமர் மோடி: 70 சதவிகிதம்

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர்: 64 சதவிகிதம்

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி: 63 சதவிகிதம்

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்: 52 சதவிகிதம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: 48 சதவிகிதம்

அதேபோல், மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 25 சதவிகமாக குறைந்துள்ளது. பட்டியலில் உள்ள மற்ற தலைவர்களை காட்டிலும் குறைந்த அளவிலேயே மோடிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரோனா இரண்டாம் அலையின்போது மே மாதத்தில் மோடிக்கு எதிராக அதிகளவிலான மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com