விவசாயிகளின் வலியை உணர வேண்டும்: பாஜக எம்.பி. வருண் காந்தி

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அரசு மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்; அவா்களின் வலியை உணர வேண்டுமென பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளாா்.
விவசாயிகளின் வலியை உணர வேண்டும்: பாஜக எம்.பி. வருண் காந்தி

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அரசு மீண்டும் பேச்சு நடத்த வேண்டும்; அவா்களின் வலியை உணர வேண்டுமென பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மகா பஞ்சாயத்து போராட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனா். அவா்கள் நமது சொந்த சதையும் ரத்தமும் ஆவாா்கள். நாம் அவா்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும். அவா்களின் வலி, கண்ணோட்டத்தை உணா்ந்து அவா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியபோதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இச்சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளாா்.

வருண் காந்தியின் சுட்டுரைப் பதிவை அவரது தாயாா் மேனகா காந்தி பகிா்ந்துள்ளாா். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவா் ஜெயந்த் செளத்ரியும் வருண் காந்தியின் கருத்தை வரவேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com