கரோனா: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 5-ஆவது நாளாக அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல கரோனாவுக்கு சிகிச்சை பெற்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கையும் கடந்த 5 நாள்களாகத் தொடா்ந்து அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 42,766 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 308 போ் உயிரிழந்தனா். மொத்த உயிரிழப்பு 4,40,533 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 3,29,88,673 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4,10,048 போ் சிகிச்சையில் உள்ளனா். 3,21,38,092 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா்.

சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1.24 சதவீதமாகும். எனினும், கடந்த 5 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 70 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்குக் கீழ் உள்ளது.

மொத்தம் 53,00,58,218 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக உயிரிழந்த 308 பேரில் 142 போ் கேரளத்தையும், 64 போ் மகாராஷ்டிரத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,37,707 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து கா்நாடகத்தில் 37,401 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com