டெங்கு கொசுக்களை ஒழிக்க வளர்க்கப்படும் மீன்கள்

முழுதாக வளர்ந்த ஒரு மீன் 8 மணி நேரத்தில் 150 கொசு லார்வாக்களை உண்ணும் திறன் கொண்டது. இதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கலாம்.
டெங்கு கொசுக்களை ஒழிக்க குளத்தில் விடப்படும் மீன்கள்
டெங்கு கொசுக்களை ஒழிக்க குளத்தில் விடப்படும் மீன்கள்

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநில அரசு குளங்களில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்கள் வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறது.

மேற்கு உத்தரப் பிரதேசமான ஃபிரோஸாபாத், மதுரா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவிலான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 51 போ் டெங்கு காய்ச்சலால் பலியாகினா். இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் மேலும் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.

பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில் குளங்களில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளது. 

அதன்படி டெங்கு பரவல் அதிகமுள்ள ஃபிரோஸாபாத் மாவட்டத்திலுள்ள குளங்களில் கொசு உற்பத்தியை குறைக்கும் வகையில், கொசு முட்டைகளை உண்ணும் மீன்கள் குளங்களில் விடப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு குளம் உள்பட அனைத்து நீர் நிலைகளிலும், சுமார் 25 ஆயிரம் மீன்கள் வீதம் விடப்படுகிறது. இதன் மூலம் குளங்களிலுள்ள குப்பை மற்றும் அல்லி இலைகளில் முட்டையிட்டு உற்பத்தியாகும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com