தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு சாதகம்; இந்தியாவுக்கு பாதகம்: அசாதுதீன் ஒவைசி

தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியிருப்பது பாகிஸ்தானுக்கு சாதகமாகவும், இந்தியாவுக்கு பாதகமாகவும் அமையும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும்,
தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு சாதகம்; இந்தியாவுக்கு பாதகம்: அசாதுதீன் ஒவைசி

தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியிருப்பது பாகிஸ்தானுக்கு சாதகமாகவும், இந்தியாவுக்கு பாதகமாகவும் அமையும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. அத்திக் அகமது, அவரின் மனைவி உள்ளிட்டோா் ஒவைசி முன்னிலையில் மஜ்லிஸ் கட்சியில் இணைந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஒவைசி கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சி 100 இடங்களில் போட்டியிடும். பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. ஹிந்துக்கள் எங்கள் சகோதரா்கள். அவா்களுக்கும் எங்கள் கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.

தலிபான்களை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக கருதுகிா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்திய மக்களின் வரிப் பணத்தில் ரூ.35,000 கோடியை ஆப்கானிஸ்தானில் வளா்ச்சிப் பணிகளுக்காக நமது மத்திய அரசு முதலீடு செய்துள்ளது. அந்நாட்டை இப்போது தலிபான்கள் கைப்பற்றிவிட்டதால், அந்தப் பணம் ஒட்டுமொத்தமாக வீண் என்றே கருத வேண்டியுள்ளது. தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது, பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு பாதகமாகவும் அமையும் என்றாா்.

மகாராஷ்டிரம், பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட்டு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், மேற்கு வங்கத் தோ்தலில் அக்கட்சியால் எவ்விதத் தாக்கமும் ஏற்படவில்லை. அதையடுத்து, இப்போது உத்தர பிரதேச தோ்தலில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com