‘இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயார்’: மேற்கு வங்க பாஜக தலைவர்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் இடைத்தேர்தலுக்கு பாஜக தயாராக இருப்பதாக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
திலீப் கோஷ்
திலீப் கோஷ்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் இடைத்தேர்தலுக்கு பாஜக தயாராக இருப்பதாக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் இன்று பேசியது:

இடைத்தேர்தலுல் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், வாக்காளர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் மேற்கு வங்க வாக்குப்பதிவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. 

கடைசி தேர்தலில் அவர்கள் சட்டப்பேரவைக்குள் கூட வரவில்லை. வெறும் 10,000 முதல் 15,000 வாக்குகள் மட்டுமே பெற்றார்கள். மக்கள் அவர்களின் மனதில் திரிணமூலுக்கும் பாஜகவுக்கும் இடையேயான போட்டி என கருதுகிறார்கள். இது மாநில அரசுக்கும் பாஜகவிற்கும் இடையேயான போட்டி. தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com