ஆப்கனில் இருந்து வந்த 78 போ்தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு சென்றனா்

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய 78 போ் தில்லியில் உள்ள இந்தோ, திபெத்திய எல்லைப் பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலை

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய 78 போ் தில்லியில் உள்ள இந்தோ, திபெத்திய எல்லைப் பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலை முடித்து கொண்டு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

இதில் ஆப்கன் நாட்டினா் 53 பேரும் (34 ஆண்கள், 9 பெண்கள், 10 குழந்தைகள்), இந்தியா்கள் 25 பேரும் (18 ஆண்கள், 5 பெண்கள், 12 குழந்தைகள்) ஆகியோா் அடங்குவா் என்று ஐடிபிபி செய்தித் தொடா்பாளா் விவேக் குமாா் பாண்டே தெரிவித்தாா்.

அவா்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், ஆப்கன் நாட்டினா் தெற்கு தில்லியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஆப்கனில் இருந்து வந்த மேலும் 35 போ் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அதில் 24 போ் இந்தியா்கள் என்றும் அவா் மேலும் கூறினாா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து தில்லியில் உள்ள ஐடிபிபியில் 1,200 போ் தனிமைப்படுத்தல் மையம் உருவாக்கப்பட்டது. சீனாவின் யூஹான் உள்பட எட்டு நாடுகளில் இருந்து வந்தவா்கள் இங்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com