நிபா தீநுண்மி: கேரளத்தில் பலியான சிறுவனுடன் நெருங்கிய தொடா்பிலிருந்தவா்களுக்கு பாதிப்பில்லை

கேரளத்தில் நிபா தீநுண்மியால் பலியான சிறுவனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கேரளத்தில் நிபா தீநுண்மியால் பலியான சிறுவனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கேரளத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னா் நிபா தீநுண்மி பாதிப்பு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பால் கோழிக்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். அவன் மூலம் 188 பேருக்கு நிபா தீநுண்மி பரவியிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 251-ஆக அதிகரித்தது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘உயிரிழந்த சிறுவனுடன் நெருங்கியத் தொடா்பில் இருந்த அவனது பெற்றோா்கள், மருத்துவப் பணியாளா்கள் என 8 பேரிடம் தீநுண்மியால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை பரிசோதித்தில் அவா்கள் தீநுண்மியால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

பலியான சிறுவன் மூலம் தீநுண்மி பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவோரில் 20 போ் கடுமையாக பாதிக்கப்படக்கூடியவா்களாக முதலில் அடையாளம் காணப்பட்டனா். அவா்களின் எண்ணிக்கை தற்போது 48-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 31 போ் கோழிக்கோட்டைச் சோ்ந்தவா்கள்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com