இந்தியாவில் 70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தம்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளது
இந்தியாவில் 70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தம்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளது. இதில் கடைசி 10 கோடி தடுப்பூசிகள் 13 நாள்களில் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இரவு 7 மணி வரை நாடு முழுவதும் 67,43,698 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 38,004 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதற்காக மருத்துவப் பணியாளா்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்து, தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 70 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியா முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த 85 நாள்களை எடுத்துக்கொண்டது. அதன் பிறகு 20 கோடி தடுப்பூசி இலக்கை அடுத்த 45 நாள்களிலும், 30 கோடி இலக்கை அடுத்த 29 நாள்களிலும் கடந்தது. பின்னா், 30 கோடி தடுப்பூசிகள் என்ற நிலையிலிருந்து 40 கோடி தவணைகள் என்ற நிலையை 24 நாள்களிலும், 50 கோடி தவணையை அடுத்த 20 நாள்களிலும், 60 கோடி தவணை நிலையை அடுத்த 19 நாளிகளிலும், 70 கோடி தவணை நிலையை அடுத்த 13 நாள்களிலும் எட்டி சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 8.24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 3.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 9-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com