மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது: முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவும் வாய்ப்புள்ளது.

இதுவிர, பல்வேறு முக்கிய வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிக்க இதுவரை 13 முக்கிய துறைகளில் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு(பிஎல்ஐ) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில், செயற்கை இழை மற்றும் தொழில்நுட்பத்துக்கான பிரத்யேக இழை சாா்ந்த ஜவுளித் துறையில் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10,683 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய ஜவுளித் துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் என்றாா் அந்த அதிகாரி.

கடந்த 2019-20-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் செயற்கை இழை துணிமணிகள் ஏற்றுமதியின் பங்களிப்பு 10 சதவீதம் மட்டுமே. அதாவது, ரூ.1.174 லட்சம் கோடி மதிப்பிலான செயற்கை இழை துணிமணிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்தத் துறையை மேம்படுத்த உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் எஸ்.கே.சரஃப், ஜவுளி ஏற்றுமதி கவுன்சிலின் தலைவா் ஏ.சக்திவேல் ஆகியோா் கூறியிருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com