ஓபிசி, யுபிஐ வங்கி பயனாளர்களா நீங்கள்? அப்போ அக்டோபர் 1க்குள் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் காசோலைப் புத்தகம் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் காசோலைப் புத்தகம் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைப் புத்தகத்தை கூடிய விரைவில் மாற்றி கொள்ளும்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டது. இருப்பினும், பழைய காசோலைப் புத்தகத்தையே வாடிக்கையாளர்கள் இப்போது வரை பயன்படுத்திவருகிறார்கள்.

புதிய அறிவிப்பு குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பயன்படுத்தக் கூடாது. எனவே, புதுப்பிக்கப்பட்ட ஐஎஃப்எஸ்சி, எம்ஐசிஆர் தகவல்களுடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகத்தை வாங்கி கொள்ளவும்" என பதிவிடப்பட்டுள்ளது.

வங்கி கிளைக்கு சென்றோ, ஏடிஎம், இணைய வங்கி வசதியின் மூலமாகவோ அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டோ புதிய காசோலை புத்தகத்தை வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com