பியூச்சர் நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் தடை

பியூச்சர் கூப்பன்ஸ், பியூச்சர் ரிடைல் ஆகியவற்றுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பியூச்சர் கூப்பன்ஸ், பியூச்சர் ரிடைல், பியூச்சர் குழுமத்தின் நிறுவனர் கிஷோர் பியானி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தடை விதித்துள்ளது. பியூச்சர் நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நிறுவன்ற தீர்ப்பை மீறியதாகக் கூறி சொத்துகள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், இந்திய தொழில் போட்டி ஆணையம் ஆகியவை பியூச்சர் குழுமத்திற்கு எதிராக நான்கு வாரத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பியூச்சர் குழுமத்தின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் சூர்யகாந்த, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்துவந்தது.

முன்னதாக, பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை, தளவாடங்கள் மற்றும் கிடங்கு வணிக நிறுவனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குழுமத்திற்கிடையே 24,731 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் 25ஆம் தேதி, ஒப்பந்தத்தை மேற்கொள்ள சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நிறுவன்றம் உத்தரவிட்டது. பியூச்சர் குழுமத்தில் தாங்கள் முதலீடு செய்துள்ளோம். எனவே, ஒப்பந்தம் செல்லாது என அமேசான் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நிறுவன்ற தீர்ப்பு செல்லும் என அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com