பவானிபூர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த மம்தா

பவானிபூர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பவானிபூர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பவானிப்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா எதிலும் தோல்வி அடையவில்லை என்பதும் பவானிபூரில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியைக் கடந்த மே மாதம் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com