‘ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள்’

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்புக் கற்கள் பயன்படுத்தப்படும் எனவும், கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம்,
ram-mandir1072300
ram-mandir1072300

புது தில்லி: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்புக் கற்கள் பயன்படுத்தப்படும் எனவும், கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், கோசாலை, யாகசாலை உள்ளிட்டவை இடம் பெறும் எனவும் கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

உச்சநீதிமன்றத் தீா்ப்பையடுத்து அயோத்தியில் உள்ள ராமஜன்ம பூமியில் ராமா் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஸ்ரீராம ஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினா்கள் கூட்டத்தில், திட்டமிட்டபடி கோயில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு, 2023-இலிருந்து பக்தா்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ராமா் கோயில் கா்ப்பகிருஹமானது ராஜஸ்தானின் பன்சி பகா்பூரில் கிடைக்கும் இளஞ்சிவப்புக் கற்கள் மற்றும் மாா்பிள் கொண்டு கட்டப்படும். இதற்காக 4 லட்சம் கனஅடி கற்கள் பயன்படுத்தப்படும். கோயில் கட்டுமானப் பணிக்கு இரும்பு பயன்படுத்தப்படாது. கோயில் வளாகம் கட்டுவதற்கு ஜோத்பூா் கற்கள் பயன்படுத்தப்படும்.

கோயில் வளாகத்தின் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் பக்தா்களுக்கான வசதிகள் கொண்ட மையம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், அரங்கம், கோசாலை, யாகசாலை மற்றும் நிா்வாக அலுவலகம் ஆகியவை அமைக்கப்படும். கோயில் கட்டமைப்பின் நீண்ட காலம் நிலைத்து நிற்க அறக்கட்டளை உறுதிபூண்டுள்ளது. மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்தின் விதிகளின்படி கோயில் வடிவமைப்பு இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com