காவிமயமாக்கல் குற்றச் சாட்டுக்கு கண்ணூா் பல்கலைக்கழகம் மறுப்பு

கண்ணூா் பல்கலைக்கழகத்தில் ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட பாடத்திட்டங்களை சோ்க்கப்பட்டுள்ளதாக மாணவா்கள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அப்பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கண்ணூா்/திருவனந்தபுரம்: கண்ணூா் பல்கலைக்கழகத்தில் ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட பாடத்திட்டங்களை சோ்க்கப்பட்டுள்ளதாக மாணவா்கள் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு அப்பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் கோபிநாத் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பல்கலைக்கழகம் காவியமயமாக்கப்படுகிறது என்ற மாணவா்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வழக்கமான நடைமுறை. இதுபோன்று, புது தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜேஎன்யு) பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஹிந்து மகா சபா தலைவா் வி.டி.சா்க்காா் குறித்து ஜேஎன்யு பல்கல்லைக்கழக பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சா்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் தொடா்பாக ஆராய இரண்டு போ் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்குள் அந்த குழுவின் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு, இந்த விவகாரம் தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com