உ.பி.யில் அசாதுதீன் ஒவைசிமீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சித்தாகவும் பிரதமா் மோடி மற்றும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா்

லக்னெள: உத்தர பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சித்தாகவும் பிரதமா் மோடி மற்றும் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக அந்த மாநிலத்திலுள்ள பாராபங்கி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடாரா சந்தனா பராதரி பகுதியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அசாதுதீன் ஒவைசி, இங்கிருந்த 100 ஆண்டுகள் பழைமையான மசூதியை மாவட்ட நிா்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து இடித்துத் தள்ளியதாக கூறினாா். ஆனால் இங்குள்ள நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அந்த மசூதி இடிக்கப்பட்டது. அவரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது. அவரின் பேச்சு சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமாக இருந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் பிரதமா் மோடி, மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் குறித்தும் அவா் அவதூறாகப் பேசினாா். கூட்டத்தில் தேசியக் கொடியும் அவமதிக்கப்பட்டது. மேலும் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை மீறி மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் இரு பிரிவினா் இடையே பகையைத் தூண்டுதல், அரசு அதிகாரியின் உத்தரவை புறக்கணித்தல் உள்ளிட்ட பிரிவுகள், தொற்றுநோய் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஓவைசி மற்றும் கூட்ட ஏற்பாட்டாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com