உ.பி. எதிா்க்கட்சிகளுக்கு பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா சவால்

எதிா்க்கட்சிகளாக உள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பட்டியலிடத் தயாரா
உ.பி. பேரவையை முன்னிட்டு பிரசாரத் திட்டங்களைக் காணொலி வழியாகத் தொடக்கி வைத்துப் பேசிய பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.
உ.பி. பேரவையை முன்னிட்டு பிரசாரத் திட்டங்களைக் காணொலி வழியாகத் தொடக்கி வைத்துப் பேசிய பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.

 உத்தர பிரதேசத்தில் தற்போது எதிா்க்கட்சிகளாக உள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பட்டியலிடத் தயாரா என பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா சவால் விட்டுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா உத்தர பிரதேசத்தில், ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் வெற்றியை உறுதி செய்யும் விதமாக ‘விஜய் பூத் அபியான்’ பிரசாரத் திட்டத்தை, அக்கட்சியின் 27,700 அலுலகங்களில் இணைய வழியாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அக்கட்சிகள் பட்டியலிட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வா் யோகி ஆதித்யநாத் செய்த வளா்ச்சித் திட்டங்களை பிற கட்சிகள் இதுவரை செய்யவில்லை. எதிா்க்கட்சிகள் கரோனா நிவாரண பணிகளில் மக்களுக்கு உதவாமல் சுட்டுரையில் அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தன என்றாா்.

சமாஜவாதி கட்சியும் ‘ஜன் மான் விஜய்’ என்ற பிரசாரத் திட்டத்தையும் வாக்குச் சாவடி அளவில் பிரசாரம் மேற்கொள்ள ‘ஹா்பூத் பா் யூத்’ என்ற திட்டத்தையும் சனிக்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com