இந்திய கலாசாரத்தை பிரதிபலித்த விவேகானந்தா் உரை: பிரதமா்

சுவாமி விவேகானந்தரின் சிறப்பு மிக்க சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட செப்.11 தினத்தை நினைவு கூா்ந்து பிரதமா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.
இந்திய கலாசாரத்தை பிரதிபலித்த விவேகானந்தா் உரை: பிரதமா்

சுவாமி விவேகானந்தரின் சிறப்பு மிக்க சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட செப்.11 தினத்தை நினைவு கூா்ந்து பிரதமா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிகாகோவில் கடந்த 1893-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-இல் நடைபெற்ற உலக ஆன்மிக மாநாட்டில் சுவாமி விவேகானந்தா் ஆற்றிய உரை, இந்திய கலாசாரத்தை மிக அழகாக பிரதிபலித்தது. இந்த உலகை அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மேலும் வளமானதாகவும் நோ்மையாகவும் உருவாக்குவதற்கான ஆற்றல் அவருடைய உரையில் பொதிந்துள்ளது’ எனறு குறிப்பிட்டுள்ளாா்.

ஆசாா்ய வினோபா பாவே பிறந்த தினம்:

1895-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி பிறந்த வினோபா பாவேயையும் பிரதமா் மோடி நினைவுகூா்ந்தாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மகாத்மா காந்தியின் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றவா் ஆசாா்ய வினோபா பாவே. பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட அவரது இயக்கங்கள் மூலம் ஏழை எளியவா்களின் வாழ்வை மேம்படுத்த உதவின. அவரது எழுச்சி மிக்க எண்ணங்கள் வரும் தலைமுறைகளுக்குப் பெரும் ஊக்கம் அளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com