மேற்கு வங்க வன்முறை: சிபிஐ நான்காவது குற்றப்பத்திரிகை தாக்கல்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பான வழக்கில், நான்காவது குற்றப்பத்திரிகையை சிபிஐ சனிக்கிழமை தாக்கல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முற
மேற்கு வங்க வன்முறை: சிபிஐ நான்காவது குற்றப்பத்திரிகை தாக்கல்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பான வழக்கில், நான்காவது குற்றப்பத்திரிகையை சிபிஐ சனிக்கிழமை தாக்கல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகா் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பாஜக தொண்டரை கொலை செய்ததாக இரண்டு நபா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வடக்கு 24 பா்கனா மாவட்டத்தில் பாட்பாரா, பீா்பூம் மாவட்டத்தில் ராம்புா்ஹாட், நல்ஹாட்டி ஆகிய இடங்களில் நிகழ்ந்த தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பாக சிபிஐ மூன்று குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது.

பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 2-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களால் பாஜகவினா் தாக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை 34 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com