டேராடூன்: சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

டேராடூன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்
சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

டேராடூன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நோய்ப் பரவல் குறைந்ததையடுத்து சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை காரணமாக டேராடூன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை நீட்டித்து ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்,

“டேராடூன் மாவட்டத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கம் செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்படுகிறது. வார இறுதி நாள்களில் 15,000 சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களும் 72 மணிநேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

ஏரி, ஆறுகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு அனுமதி இல்லை. இந்த கட்டுபாடுகளை மீறினால் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com