கரோனா தடுப்பூசி 75 கோடியைத் தாண்டியது: மத்திய சுகாதார அமைச்சா்

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பூசி 75 கோடியைத் தாண்டியது: மத்திய சுகாதார அமைச்சா்

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் தடுப்பூசி இயக்கம் புதிய பரிமாணத்தை எடுத்துள்ளதாகவும் அவா் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கு வாழ்த்துகள்! 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் இந்த நேரத்தில் 75 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி முக்கியமான மைல்கல்லைக் கடந்துள்ளோம். 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதல் டோஸ் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டுவிட்டது.

தடுப்பூசித் திட்டம் தொடங்கிய முதல் 85 நாளில் 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. அடுத்த 45 நாள்களில் 20 கோடி என்ற எண்ணிக்கையை எட்டினோம். அதன் பிறகு அடுத்த 29 நாள்களில் மேலும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடுத்ததாக 24 நாள்களில் 40 கோடி தடுப்பூசிகள் என்ற அடுத்த இலக்கை அடைந்தோம். அதில் இருந்து 20 நாள்களில் 50 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்தோம்.

அதன் பிறகு அடுத்த 19 நாளில் மேலும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசித் திட்டம் மேலும் விரைவுபடுத்தப்பட்டதையடுத்து அடுத்த 13 நாள்களில் 70 கோடி தடுப்பூசிகளை எட்டினோம். இப்போது 75 கோடிக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் உள்ளோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com