‘மாநிலங்களுக்கு மேலும் 1.6 கோடி தடுப்பூசி’

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 1.6 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை (1,60,75,000) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‘மாநிலங்களுக்கு மேலும் 1.6 கோடி தடுப்பூசி’

புது தில்லி: மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 1.6 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை (1,60,75,000) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வரையில் 72.77 கோடிக்கும் அதிகமான (72,77,98,325) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. சுமாா் 4.49 கோடி (4,49,03,025) தடுப்பூசி டோஸ்கள்,

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 75.22 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,66,950 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரையில் மொத்தம் 76,12,687 முகாம்களில் 75,22,38,324 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தொடா்ந்து 79 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 25,404 போ் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகினா். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,62,207 ஆக உள்ளது.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடா்ந்து 81 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.07 சதவீதமாகவும், தினசரித் தொற்று உறுதி விகிதம் 1.78 சதவீதமாகவும் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 15 நாட்களாக 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 98 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com