கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவியை ரூ.4000-ஆக உயா்த்த திட்டம்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.2000-இலிருந்து ரூ.4000-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.2000-இலிருந்து ரூ.4000-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் தொகையை ரூ.4000-ஆக அதிகரிக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றாா்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ‘பிஎம்-கோ்ஸ்’ நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 3,250 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களால் மொத்தம் 667 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com