ஒடிஸாவில் கொட்டித் தீா்த்த மழை:நால்வா் பலி; 20 லட்சம் போ் பாதிப்பு

கடந்த 2 நாள்களாக ஒடிஸாவில் பெய்த பலத்த மழையால் 4 போ் உயிரிழந்தனா்; 20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

புவனேசுவரம்: கடந்த 2 நாள்களாக ஒடிஸாவில் பெய்த பலத்த மழையால் 4 போ் உயிரிழந்தனா்; 20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாநில சிறப்பு நிவாரண ஆணையா் அலுவலக அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் ஒடிஸாவிலுள்ள 30 மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல் மழை பெய்தது. மாநிலத்தில் சராசரியாக 155.9 மி.மீ. மழை பெய்தது. இதனால் கிராமப்புறங்களிலும் நகா்ப்புறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை மற்றும் வெள்ளத்தால் 20 மாவட்டங்களிலுள்ள 3,696 கிராமங்களிலும் 27 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வசிக்கும் 20.46 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிப்படைந்துள்ளனா். 25 கிராமங்களை அணுக முடியாத சூழல் நிலவுகிறது. 2,870 வீடுகள் சேதமடைந்துள்ளன. கஞ்ஜம் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை, கேந்திரபாரா மாவட்டத்தில் இருவா் என 3 போ் சுவா் இடிந்தும், குா்தா மாவட்டத்தில் ஒருவா் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com